பாகிஸ்தானில் சீனர்களை இலக்கு வைத்து தாக்குதல்!!! சீனா கடும் கண்டனம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 23 சீன பொறியாளர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என சீனா எச்சரித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு பாகிஸ்தானை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானில் வசிக்கும் சீன மக்கள் தங்கள் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு சீன அரசு அறிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





