டுவிட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சிய தகவல் வெளியிட்ட மஸ்க்
டுவிட்டர் எக்ஸ் தளத்தில் எந்நேரமும் ட்வீட் செய்பவர்கள், அதிக பின்தொடர்வோரை கொண்டிருக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயை (Monetization) பகிர முடிவு செய்துள்ளது அந்நிறுவனம்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார்.
ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது. ட்விட்டருக்கு போட்டியாளர்கள் ஏராளமாக உருவானாலும் அதை கண்டும் காணாமல் மஸ்க் இயங்கி வருகிறார். அண்மையில் டுவிட்டர் தளத்தின் பெயரை எக்ஸ் என மாற்றி இருந்தார்.
இந்த நிலையில், இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயில் ஒரு பகுதியை வழங்கும் விதமாக விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்தை கடந்த மாதம் 28-ம் திகதி அறிமுகம் செய்தது டுவிட்டர்.
இதற்கு கிரியேட்டர்கள் வெரிஃபை செய்யப்பட்ட கணக்கை கொண்டிருக்க வேண்டும். அதோடு அவர்களது பதிவுகளுக்கு இடையில் வரும் விளம்பரங்களை ட்விட்டர் கணக்கில் கொண்டு வருவாயை பகிரும் என தெரிகிறது.
இதற்கு சில தகுதிகளை அடிப்படையாக வைத்துள்ளது எக்ஸ். வெரிஃபை செய்யப்பட்ட கணக்கு, கடந்த 3 மாதங்களில் 1 கோடியே 50 லட்சம் இம்ப்ரஷன், 500 ஃபாலோயர்ஸ்களை கொண்டிருப்பவர்கள் மானிடைசேஷன் பெற கோரிக்கை விடுக்கலாம்.
அதோடு பே-அவுட் பிரிவில் வங்கிக் கணக்கு விவரங்களை சேர்ப்பதன் மூலம் மாதந்தோறும் விளம்பர வருவாயில் குறிப்பிட்ட பங்கை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் செட்டிங்ஸ் பிரிவில் மானிடைசேஷன் உள்ளது.