பிரான்ஸில் வேலையின்மை வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரான்ஸில் வேலையில்லாதவர்கள் தொடர்பான புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, வேலையில்லாதவர்கள் விகிதத்தில் சிறிய அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது காலாண்டில் 7.1% வீதமாக இருந்த வேலையின்மை வீதம், இரண்டாவது காலாண்டில் 7.2% சதவீதமாக அதிகரித்துள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 564,000 பேர் இந்த வேலையின்மையில் உள்ளனர். 2009 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகியுள்ள மிக குறைந்த அளவு எண்ணிக்கையாகும்.
மேற்படி தகவல்களை பிரபல ஆய்வு நிறுவனமான INSEE இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)