சிங்கப்பூரில் தமிழருக்கு 18 ஆண்டுகள் தடுப்புக் காவல் மற்றும் 12 பிரம்படிகள்
சிங்கப்பூரில் 44 வயதுமிக்க வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது.
18 ஆண்டுகள் தடுப்புக் காவல் மற்றும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாக மானபங்கம் செய்தது, அரசாங்க ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனக் கூறப்பட்டுள்ளது.
ஜூரோங் மீன்பிடித் துறைமுகத்தில் ஒப்பந்தத் ஊழியராக பணிபுரிந்த மார்க் கலைவாணன் தமிழரசன் என்பவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணிப்பெண் ஒருவரை அவரின் முதலாளி வீட்டில் வைத்தே கலைவாணன் பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது.
இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவருக்கு 18 ஆண்டுகள் தடுப்புக் காவல் மற்றும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.