இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள அவுஸ்திரேலியா
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான பயண அறிவுறுத்தல்களின் தொகுப்பை மீளாய்வு செய்ய அவுஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆலோசனைன இன்று முதல் இது அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும்போது மேலும் எதிர்ப்புகள், போராட்டங்கள் போன்றவறவை தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கிரெடிட் கார்டு மோசடி, அதிக கட்டணம் வசூலித்தல், போலி பொருட்களை விற்பனை செய்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.