உக்ரைன் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – 16 மாதங்களின் பின் கிடைத்த அனுமதி
உக்ரைன் நாட்டின் மிகப்பெரியத் துறைமுக நகரான ஒடெசாவில், கடற்கரைக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
16 மாதங்களுக்குப் பிறகு மக்கள் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் கடற்படைத் தளம் ஒடெசாவில் அமைந்துள்ளதால், போர் ஆரம்பித்தது முதலே அந்நகரை குறிவைத்து ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கடற்கரைக்குச் செல்லவும், குளிக்கவும் அம்மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.
அந்த கடற்பரப்பில் நூற்றுக் கணக்கான கண்ணி வெடிகளை ரஷ்யப் படைகள் மிதக்க விட்டுள்ளதால், அவை கரை ஒதுங்கிவிடாத வகையில், பாதுகாப்பு வலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
(Visited 7 times, 1 visits today)