இலுப்பைகுளம் விகாரை நிர்மாணப்பணிகளுக்கு எதிராக தடை – ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருந்த விகாரையின் நிர்மாண பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனை அடுத்து குறித்த இடத்தில் விகாரை அமைப்பதினால் இனமுருகல் ஏற்படும் என நிர்மாண பணிகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இதனை அடுத்து விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம்- என திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் இன்று (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப் பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) காலை 9.00 மணி தொடக்கம் 10.30 மணி வரை இப்போராட்டம் நடத்தப்பட்டது.
சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை குழப்புகின்ற ஆளுநரை அனுப்புவோம்.வரலாற்று சான்றுகளை கிழறுகின்ற R.சம்பந்தன்,புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த பகுதியில் எது வித விகாரையும் இருக்கவில்லை என அக்கிராமத்தில் உள்ள வயோதிப பெண்ணொருவர் உட்பட சிலர் ஊடகங்களுக்கு தமது கருத்துக்களையும் வெளியிட்டு இருந்தனர்.
இதனையஅடுத்து. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களுக்கும், பௌத்த மதகுரு ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்ற போதிலும் பொலிஸாரினால் சமரசம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.