ஹவாயில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஹவாயில் மௌய் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் தீயில் சிக்கி 1700 வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹவாய் தீவான மௌய், காட்டுத்தீ பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் தப்பியவர்கள் தங்கள் உயிரைத் தவிர உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.
தீவின் மேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய நகரமான லஹைனாவில் ஏற்பட்ட தீ, மற்றும் சாம்பல்களை காட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
(Visited 10 times, 1 visits today)