உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 4 வருடங்களாகியும் நீதி கிடைக்கவில்லை – கர்தினால் அதிருப்தி!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு நள்ளிரவு ஆராதனையின் போது கருத்து தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டை இந்த விடயத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று நான்கு வருடங்களாகின்றது. இன்னமும் நீதியில்லை. என்ன நடந்தது என்பது இன்னமும் எவருக்கும் தெரியாது. மக்கள் பல்வேறு விதமான விடயங்களை தெரிவிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாங்கள் உண்மை நீதிக்காக போராட வேண்டும். அதுவே கிறிஸ்தவ மதம் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)





