தீவிர பாதுகாப்பில் இலங்கை – தயார் நிலையில் படையினர்
ஈஸ்டர் வாரத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடு நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தை பொறுத்த வரையில் இரண்டு விடயங்களில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
முதலாவது ஈஸ்டர் வாரமாகும். இன்று புனித வெள்ளி தினமாகும். கிறிஸ்தவர்களுக்கு இந்த நாட்கள் முக்கியமான நாட்களாகும்.
இதனால் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பினை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்தந்த தேவாலங்களில் போதகர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரை அழைக்கவும் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கான பாதுகாப்பு அமைச்சுடன் பாதுகாப்பு பிரிவு தலைமைகள் கலந்துரையாடல் மேற்கொண்டு அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விசேடமாக மேல் மாகாணத்தில் அதிகாரிகள் அனைவரும் கலந்ரையாடல் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.