ஐரோப்பா

ஜார்ஜியா நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு!

ஜார்ஜியாவில் உள்ள ஷோவி மலை உல்லாசப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக உள்நாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட நீருக்கு பெயர் பெற்ற ராச்சா பகுதியில் உள்ள ரிசார்ட்டில் கடந்த வியாழக்கிழமை குறித்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்த ட்ரோன் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதில் 11 பேர் பலியாகியுள்ளதுடன், ஏராளமானவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஜோர்ஜிய பிரதம மந்திரி இராக்லி கரிபாஷ்விலி டஜன் கணக்காணவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!