பிரித்தானிய முன்னணி சட்டக்கல்லூரி இணையத்தளம் மது சைபர் தாக்குதல் – கடும் நெருக்கடியில் மாணவர்கள்
பிரித்தானியாவின் BPP எனப்படும் முன்னணி முதுகலைப் பட்டதாரி சட்டக்கல்லூரி இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
பரீட்சைகள் நெருங்கி வரும் நிலையில் இந்த தாக்குதலால் மாணவர்களால் பாடப் பணிகளை அணுக முடியாமல் போய்விட்டது என செய்தி வெளியாகியுள்ளது.
“எங்கள் பாடப் பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது அல்லது தடுக்கப்பட்டுள்ளது” என மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது அனுபவித்து வரும் தகவல் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சேவை செயலிழப்பு பற்றிய விசாரணையைத் தொடர்ந்து, இணையத்தளம் அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் அணுகப்பட்டதா என கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னரே இணைய பாதுகாப்பு சம்பவத்திற்கு உட்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட தரவுகளின் தன்மை மற்றும் அளவு ஆகியவற்றின் முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு இணைய பாதுகாப்பு நிபுணர்களுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். இது போன்ற ஒரு சம்பவத்தை விசாரிப்பது மிகவும் சிக்கலானது மற்றும் குறிப்பிடத்தக்க நேரம் எடுக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் இந்த மாதம் சட்டப் பயிற்சித் தேர்வில் பங்கேற்க உள்ளனர். BPP ஆனது தனியார் பங்கு நிறுவனமான TDR Capital ஆல் 2021 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் சுமார் 21,000 மாணவர்கள், 13 மையங்களில், இங்கிலாந்து முழுவதும் எட்டு இடங்களில் மற்றும் உலகம் முழுவதும் ஒன்லைனில் படிக்கின்றனர்;. 83% க்கும் அதிகமானோர் முதுகலை திட்டங்களில் உள்ளனர்.