ஜெர்மனியில் அகதி முகாம் அமைக்க திட்டம் – கடுமையாக எதிர்க்கும் மக்கள்
ஜெர்மனி நாட்டில் அகதி முகாம் ஒன்று அமைக்கபடுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு எதிராக நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜெர்மனியின் மெக்லம் பேர்க்கோமன் மாநிலத்தில் உள்ள பிரதேசத்தில் ஒரு அகதி முகாமை கட்டுவதற்கு அப்பிரதேசத்தில் உள்ள நகர நிர்வாகமானது முடிவு எடுத்து இருந்தது.
குறித்த இடத்தில் இவ்வாறான அகதி முகாமை கட்ட கூடாது என்று அப்பிரதேச மக்கள் நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கிட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நிர்வாக நீதிமன்றமானது அவ்வாறு பொது மக்களுடைய கருத்தை கருத்தில் கொள்ள முடியாது என்றும் அப்பிரதேசத்தில் அகதி முகாமை கட்ட முடியும் என்றும் தீர்ப்பை வழங்கிள்ளது.
அதாவது நிர்வாக நீதிமன்றமானது தனது தீர்ப்பை இவ்வாறு கூறி இருக்கின்றது.
இந்நிலையில் இந்த தீர்ப்பின் பிரகாரம் இந்த பிரதேசத்தினுடைய நகர நிர்வாகமானது அகதிகள் முகாம் ஒன்றை குறிப்பாக 250 அகதிகள் வசிக்க கூடிய வகையில் அகதி முகாமிற்குரிய கட்டுமானத்தை ஆரம்பித்து இருக்கின்றது.
இந்த கட்டுமான பணிகளுக்கு எதிரான முறையில் இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியதாக தெரியவந்து இருக்கின்றது.
100ற்கு மேற்பட்டவர்கள் இந்த அகதி முகாம் கட்டும் இடத்திக்கு சென்று ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியதாக தெரியவந்துள்ளது.