பிரான்ஸில் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – கடும் நெருக்கடியில் அதிகாரிகள்
பிரான்ஸில் சிறைச்சாலைகளில் அதன் அளவை விட கைதிகள் அதிகளவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில காலமாக ஒவ்வொரு மாதமும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிரான்ஸில் தற்போது 74,513 கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். முதன்முறையாக பிரான்சில் கைதிகளின் எண்ணிக்கை 74,000 எனும் எல்லையைக் கடந்துள்ளது.
கடந்த ஆண்டை விட தற்போது 2,500 கைதிகள் அதிகமாக சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸில் மொத்தமாக 60,666 கைதிகள் சிறைவைக்கக்கூடிய இடங்கள் மட்டுமே உள்ளன.
ஆனால் அதன் அளவை மீறி 122.8% வீத கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இதற்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 6 times, 1 visits today)