மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய தயாராகும் அரசு!
இரண்டு மருந்துகளை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய அரசு தயாராகி வருவதாக சுகாதார சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அதிக விலைக்கு மருந்துகள் வாங்குவது தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
7000 ரூபாவுக்கு விற்கப்படும் கான்சிக்ளோவியன் என்ற வைரஸ் தடுப்பு மருந்தை 77000 ரூபாவுக்கும், 200 ரூபா பெறுமதியான லினோசோலிட் என்ற ஆன்டிபயாடிக் மருந்தை 2200 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முயற்சி நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற செயல்களால் நாடு தேவையற்ற கடனாளியாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
(Visited 2 times, 1 visits today)