ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கை வைத்தியரின் மனிதாபிமான செயல்
இலங்கையைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் நேற்று வியாழக்கிழமை(28) மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதிகளில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு போசக்கை மேம்படுத்தும் வகையில் விற்றமீன் மருந்துகள் வழங்கி வைத்துள்ளனர்.
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்த நிலையில் குறித்த மனிதாபிமான பணியை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (27) வியாழக்கிழமை குறித்த பின் தங்கிய கிராமத்தில் உள்ள குறித்த இரு பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொண்டதோடு அவர்களுக்கு தேவையான விற்றமீன் அடங்கிய மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது மடு வைத்திய அதிகாரி வைத்தியர் டெனி மற்றும் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் ஆகியோரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.