எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்தவர்கள் மீது CID விசாரணை நடத்த வேண்டும் – காஞ்சனா
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி கொலன்னாவ முனையத்தில் எரிபொருள் விநியோகத்திற்கு CPC மற்றும் CPSTL ஊழியர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் CID ஊடாக விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
CPC மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) நிறுவனங்களின் ஊழியர்கள் குழுவொன்று மார்ச் 28 ஆம் திகதி நண்பகல் எரிபொருள் விநியோக பகுதிக்குள் பலவந்தமாக நுழைந்து அதன் ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அமைச்சர் IGPக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் ஏற்றுவதற்காக வந்த பௌசர்கள், இதனால் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட எரிபொருள் விநியோகம் முடங்கியது.
சம்பவங்களுடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட சில ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளின் பின்னரும் அவர்கள் தெரிவித்த அறிக்கைகளின்படி, எதிர்காலத்திலும் எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் ஊடாக விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், எரிபொருள் விநியோக வலயங்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறும் அமைச்சர் விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.