ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய Mi-8 ஹெலிகொப்டர் – 06 பேர் பலி!

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அவசரகால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Mi-8 என்ற ஹெலிகாப்டர் தெற்கு சைபீரியாவில் அல்தாய் குடியரசில் உள்ள பகுதியில் தரையிறங்கும்போது மின்கம்பியுடன் மோதி தீபிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஹெலிகாப்டர் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் சுற்றுலா பயணிகள் குழுவை ஏற்றிச் சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹெலிகொப்டரில் 13 பேர் இருந்தாக கூறப்படுகிறது. அவர்களில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)