சிங்கப்பூரில் முடிவுக்கு வரும் 3G சேவை – 2024 முதல் இயங்காது
சிங்கப்பூரில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் 3G சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளன.
M1, Singtel மற்றும் Starhub ஆகிய சேவை நிறுவனங்கள் இதனை தெரிவித்துள்ளன.
குரல், செய்தி மற்றும் தரவு உட்பட 3G சேவைகளை அந்நிறுவனங்கள் வழங்காது என தெரிவித்துள்ளன.
புதிய தலைமுறைகளுக்கு ஏற்ப 5G அதிவேக இணைய சேவைகள் சிங்கப்பூரில் அறிமுகமாகியுள்ளது.
இதனால் அதிகம் பயன்படுத்தப்படாத பழமையான 3G சேவை இனி இயங்காது என்று மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தெரிவித்தன.
3G சேவை இயங்காது என்ற அறிவிப்பு யாருக்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது, ஏனெனில் புதிய 4G மற்றும் 5G சேவைகள் ஏற்கனவே பலரின் விருப்பமான ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)