கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் புதிய மருத்துவ ஒக்சிசன் நிலையம் அங்குரார்ப்பணம்
திருகோணமலை- கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் புதிய மருத்துவ ஒக்சிசன் நிலையம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்த ஒக்சிசன் தொகுதியானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UNOPS சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த ஒக்சிசன் தொகுதியானது சுமார் 600,000 அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 20 கோடி ரூபாய்கள்) பெறுமதியானது.
இந்த ஒக்சிசன் நிலையானது.ஒரு நாளைக்கு 70 பெரிய சிலிண்டர்களை (Jumbo Cylinders) 95% தூய்மையுடன் நிறப்பும் திறன் கொண்டது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் போல் ரொஷான் இதை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் UNOPS நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.