பிரித்தானியாவில் போலி ஆலோசனைகள் மூலம் பணக்காரரான தமிழர் – பிரித்தானிய பத்திரிகை தகவல்
பிரித்தானியாவில் போலியாக அகதி தஞ்சம் கோருவதற்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கு 10,000 பவுண்டுகள் வரை அறவிடும் தமிழர் ஒருவர் தொடர்பில் பிரித்தானிய இணையத்தளமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
டெய்லி மெயில் செய்தி சேவை நடத்திய மிகப்பெரிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் பவுண்டுகள் சொத்து சாம்ராஜ்யம், சிறப்பு இலக்கம் கொண்ட இலக்க தகடு கொண்ட BMW கார் என சொகுசு வாழ்க்கை வாழும் லிங்கஜோதி என்ற தமிழரே இந்த குற்றச்சாட்டில் சிக்கிய நிலையில் அவர் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞரின் வாழ்க்கை அனுபவித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
1983ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரித்தானியா வந்த லிங்கஜோதி தற்போது மிகப்பெரிய பணக்காரராகியுள்ளார்.
அவர் குடிவரவு அதிகாரிகளிடம் போலிக் கதைகளை கூறுபவர்களிடம் நெருக்கமாகுவதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அகதி தஞ்சம் பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறிகின்றார்.
உதவி செய்யவில்லை என்றால் தன்னால் நிம்மதியாக வாழ முடியாதென கூறுவதுடன், அதற்காக 10,000 பவுண்டுகள் வரை கட்டணம் அறவிட்டு வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெய்லி மெயில் செய்தி சேவை நிரூபர்கள் மாற்றுவேடத்தில் லிங்கஜோதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் தங்குவதற்கு உதவ என்ன செய்ய முடியும் என லிங்கஜோதியிடம் கேட்டபோது, அவர் உடனடியாக சித்திரவதை, தாக்குதல், அடிமை வேலை, பொய்யான சிறைவாசம் மற்றும் மரண அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய முற்றிலும் கற்பனையான கதைகளை கூற வேண்டும் என ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
அதற்கு உதாரணமாக பஞ்சாபிலிருந்து புதிதாக ஒரு சிறிய படகில் வந்த ஒரு விவசாயி போலவும், இங்கிலாந்தைச் சேர்ந்த அவரது மாமா அவருக்கு உதவுவது போலவும், இந்தியாவில் உள்ள ஒரு சீக்கிய பிரிவினைவாதக் குழுவின் ஆதரவாளராக நடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலிஸ்தானிக்கு ஆதரவானவர் என இந்திய அரசாங்கம் உங்களைக் குற்றம் சாட்டுவதனால் காவலில் வைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாகவும், நீங்கள் மோசமாக நடத்தப்பட்டதாகவம் கூற வேண்டும்.
சித்திரவதை செய்யப்பட்டீர்கள் அல்லது பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டீர்கள் என கூற வேண்டும். அதனால்தான் திருமணம் செய்ய முடியாமல் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள எண்ணியதாகவும் கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறையில் இருந்து அவரை விடுவிப்பதற்காக அவரது பெற்றோர் காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்த பிறகு, புலம்பெயர்ந்தவர் தனது தாயகத்தில் துன்புறுத்தலில் இருந்து தப்பித்து பிரான்ஸிற்கு தப்பிச் செல்ல உதவுவதற்காக ஒரு ஆட்கடத்தல்காரருக்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதென அதிகாரிகளிடம் கூற வேண்டும் என ஜோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
பணம் கொடுக்காததால் ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் குடும்பத்திற்கு ஆபத்து என்பதனால் அவர்களிடம் சித்திரவதையை அனுபவிப்பதாகவும் கூறி அகதி அந்தஸ்த்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கும் இவ்வாறான போலி கதைகளை கூற வைப்பதாகவும் அதற்காக 10000 பவுணட்கள் பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
Image curtesy – Dailymail