நீதிபதி வீட்டில் பணிப்பெண்ணுக்கு அநீதி; மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் 16 வயது சிறுமி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 14 வயது சிறுமியை நீதிபதி வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நீதிபதியின் மனைவியால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட அந்த சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவில் நீதிபதி அசிம் ஹபீஸ் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட 14 வயது சிறுமி துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிபதியின் மனைவி சிறுமியை கொடுமை படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சர்கோதாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மைனர் பெண்ணை நீதிபதியின் வீட்டில் வேலைக்கு அனுப்பிய முக்தார் என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதாக சர்கோதா காவல் கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.முக்தாரின் ஆலோசனையின் பேரில் 7 மாதங்களுக்கு முன்பு நீதிபதியின் இல்லத்திற்கு தங்கள் மகளை பணிப்பெண்ணாக அனுப்ப சம்மதித்ததாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.
நீதிபதியின் மனைவி தன்னை சித்ரவதை செய்வதாகவும், உடல் முழுவதும் காயங்கள் இருப்பதாகவும் மைனர் மகள் கூறியதாக பெற்றோர் கூறுகின்றனர்.சிறுமி நகைகளை திருடியதாக குற்றம் சாட்டி நீதிபதியின் மனைவி குழந்தையை கொடூரமாக தாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மேலும் தெரிவித்தனர்.
நகைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அவரது மனைவி தனக்குத் தெரிவித்ததாகவும், ஆனால் மைனர் சிறுமி மீது திருட்டு குற்றச்சாட்டு இல்லை என்றும் நீதிபதி கூறுகிறார்.மகளின் உடல்நிலை மோசமடைந்ததால், ‘மோசமான நிலையில்’ நீதிபதியின் மனைவி அவளை வீட்டில் இறக்கிவிட்டதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
பெற்றோர் குழந்தையை சர்கோதாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு (DHQ) கொண்டு சென்றனர். பின்னர், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், லாகூரில் உள்ள பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.