முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்!

முட்டை ஒன்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (25.07) நள்ளிரவு முதல் இது அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மிகக் குறைந்த விலையில், விற்பனை செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய நாடெங்கிலும் உள்ள சதொச நிறுவனங்களின் மூலம் முட்டை ஒன்றை 35 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)