தேசிய கராத்தே போட்டியில் 19 பதக்கங்கள் வென்ற வவுனியா வீரர்கள்

தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது.
இதில் 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கம் 8 தங்கப் பதக்கங்கள்,2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
நேற்று (23) நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே சங்கம் 4 தங்கப் பதக்கங்கள் மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட ரீதியில் 12 தங்க பதக்கங்களையும் ,2 வெள்ளிப் பதக்கங்களையும், 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று கொண்டுள்ளது.
வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கு ஞா.ஞானகீதன் ஆசிரியர் பயிற்றுவித்திருந்தார்.
(Visited 15 times, 1 visits today)