மலேசியாவில் முதலையொன்றின் வயிற்றில் மீட்கப்பட்ட நபரின் சடலம்
மலேசியாவில் முதலையொன்றின் வயிற்றிலிருந்து நபர் ஒரு சடலமாக மீட்கப்பட்டார்.
சபா மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 60 வயது மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அட்டி பங்ஸா (Addi Bangsa) எனும் அந்த மீனவரை வலவிலங்குத் துறை கடந்த சில நாள்களாகத்
தேடி வந்தது.
தேடல் பணிகளின் 4ஆம் நாளில் அட்டியை விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட முதலையொன்றை அதிகாரிகள் அவதானித்துளள்னர்.
அதனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று வயிற்றைக் கிழித்ததில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அது காணாமல் போன மீனவரின் சடலம் என்பதை அவரது குடும்பத்தார் உறுதிசெய்ததாக Bernama செய்தி கூறியது.
அந்த ஆண் முதலையின் எடை 800 கிலோகிராம். அது 4.26 மீட்டர் நீளத்தில் இருந்ததாகத் தவாவ் (Tawau) வனவிலங்குத் துறை அதிகாரி குறிப்பிட்டார்.
(Visited 29 times, 1 visits today)





