கொழும்பில் அடுக்குமாடியில் இருந்து தவறி விழுந்து வர்த்தகர் பரிதாபமாக பலி

கருவாதோட்டம் ரொஸ்மீட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து வர்த்தகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த வர்த்தகர் அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு -5 பகுதியைச் சேர்ந்த 47 வயதானவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதே பரிசோதனையின் பின்னர் இந்த சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னணி பொருளியல் ஆய்வு நிறுவனமான ப்ரொன்டயர் ரிசர்ச் நிறுவனத்தின் ஸ்தாபகராகவும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் அமால் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாதோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 24 times, 1 visits today)