இஸ்ரேல் பிரதமர் மீளவும் வைத்தியசாலையில் அனுமதி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சத்திரசிகிச்சைக்காக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு வாரங்களுக்குள் இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். ஒரு வாரத்திற்குள் இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த வாரம் அதிக வெப்பநிலையால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவசர இருதய சத்திரசிகிச்சைக்காகவே பிரதமர் இம்முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அறுவைசிகிச்சை செய்து அவர் பணிக்குத் திரும்பும் வரை, நாட்டின் நீதித்துறை அமைச்சர் யாரிவ் லெவின் அட்டர்னி ஜெனரலின் பொறுப்புகளை வகிப்பார்.
தற்போது 73 வயதாகும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தான் நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
எனினும், பிரதமரின் ஆட்சிக்கு எதிராக இஸ்ரேலில் பலத்த பொது எதிர்ப்புக் கட்டமைக்கப்பட்டுள்ளது. காரணம் அவர் கொண்டு வந்த நீதித்துறை சீர்திருத்த முன்மொழிவு.
இந்த பிரேரணை தற்போது இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
குறித்த பிரேரணைக்கு எதிராக தற்போது நாடு முழுவதும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.