கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு
உக்ரைன் தற்போது கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருவதாக ரஷ்யா கூறுகிறது.
மேற்கு பெல்கொரோட் பகுதியில் உள்ள ரஷ்ய எல்லைக் கிராமமான ஷுரவ்லெவ்கா மீது உக்ரைன் வெள்ளிக்கிழமை கொத்து குண்டுகளால் தாக்கியதாக பெல்கொரோட் ஆளுநர் இன்று தெரிவித்தார்.
அதன்படி, ஷுரவ்லெவ்கா கிராமத்தில் பல ராக்கெட் லாஞ்சரில் இருந்து உக்ரைன் 21 பீரங்கி குண்டுகள் மற்றும் மூன்று கிளஸ்டர் குண்டுகளை வீசியதாக ஆளுநர் கூறினார்.
எனினும், இது தொடர்பில் உக்ரைன் இதுவரை பதிலளிக்கவில்லை. உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்குவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது.
சுமார் நூறு நாடுகள் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
அதன்படி, நட்பு நாடுகளும் கூட அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது கடினமான முடிவு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த வாரம், கப்பல்கள் மூலம் அமெரிக்கா ஆயுதங்களை உக்ரைனுக்கு கொண்டு செல்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியது.
அதன்பிறகு, உக்ரைன் கிளஸ்டர் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா இன்று அறிவித்தது. எனினும், இது தொடர்பாக அமெரிக்கா இதுவரை பதிலளிக்கவில்லை.