இலங்கைக்கு மீண்டும் காத்திருக்கும் நெருக்கடி – எச்சரிக்கும் பேராசிரியர்

இலங்கை மீண்டும் செப்டெம்பர் மாதம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெட்சில இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நிதி நிதியத்தின் 39 வீத பொருளாதார மீட்சி ஒப்பந்தங்கள் மே மாதத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய போதிலும், அரசாங்கம் 10 வீதத்தையே நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் அமிந்த மெத்சில மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 19 times, 1 visits today)