பெருவில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டம்..
பெரு அதிபர் டினா பொலுவார்டேவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ, காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டினா பொலுவார்டே,எதிர்க்கட்சி ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார்.
அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெட்ரோ காஸ்டில்லோவை விடுவிக்ககோரியும், மீண்டும் தேர்தல் நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டங்களில் இதுவரை 60க்கும் பேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் லிமாவில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிஸார் அப்புறப்படுத்தினர்.
(Visited 7 times, 1 visits today)