ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் சீனா
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது இது உலகில் உணவு நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பது இரகசியமல்ல.
ரஷ்யாவின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைத் தீர்க்க உலகத் தலைவர்கள் துரிதமாகச் செயல்படுவதை இப்போது பார்க்க முடிகிறது.
நேற்று கருங்கடல் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலின் விளைவாக உக்ரைன் துறைமுகங்களான ஒடேசா மற்றும் மைகோலைவ் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், அனுப்பப்பட வேண்டிய 60,000 டன் தானியங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைனின் விவசாய அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கோதுமை மாவின் விலை பெருமளவு உயரும் என்று கூறப்படுகிறது.
இது முழு உலகத்தையும் மிகத் திடீரெனப் பாதிக்கும் நிலையாகும், ரஷ்யாவின் கடுமையான முடிவுகளால், தற்போது கூட, கோதுமை மாவின் விலையில் அசாதாரண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் தாக்குதல்களால், உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதால், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக உள்ளது.
உலகின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கருங்கடல் வழியாக தானியங்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதை உறுதி செய்வதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.