அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் வந்ததும் ஏவுகணை விட்டு எச்சரித்த வடகொரியா
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, வட கொரியா மீண்டும் இரண்டு ஏவுகணைகளை அதன் கிழக்குக் கடலில் செலுத்தியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய இராணுவங்கள் தெரிவித்துள்ளன.
நான்கு தசாப்தங்களில் முதல் முறையாக ஒரு அமெரிக்க அணு ஆயுதம் தாங்கிய பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரிய துறைமுகத்திற்கு வந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஏவுகணைகளும் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச போர் விதிகளை மீறி வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு தென் கொரியாவும் ஜப்பானும் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன.
(Visited 4 times, 1 visits today)