பேஸ்புக் செயலியில் புதிய காணொளி அம்சங்கள்!
பேஸ்புக் செயலியில் காணொளி சார்ந்த அம்சங்களில் பல மாற்றங்களை செய்துள்ளதாக மெட்டா அறிவித்துள்ளது.
வீடியோ எடிட்டிங் கருவிகள், HDR இல் வீடியோக்களை பதிவேற்றும் திறன் மற்றும் வீடியோ டேப் மூலம் பழைய வாட்ச் டேப் மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல வீடியோ அம்சங்களுக்கான மேம்படுத்தல்களை Facebook இல் Meta அறிவித்துள்ளது.
புதிய எடிட்டிங் கருவிகள் பயனர்கள் தங்கள் வீடியோக்களில் ஒலி அமைவு மற்றும் பயனர்கள் தங்கள் காணொளிகளில் சரியான ஒலியை தடையின்றி இணைக்கலாம்.
பயனர்கள் தங்கள் வீடியோக்களை டிரிம் செய்து கட் செய்து, அதற்கான தலைப்புகளையும் சேர்க்க முடியும்
இசை மற்றும் Audio clip களை தேடி சேர்க்கும் திறன், குரல்வழிகளைப் பதிவுசெய்தல் மற்றும் தேவையற்ற பின்னணி இரைச்சலைக் குறைத்தல் ஆகிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பேஸ்புக் தளத்தில் தற்போது பேஸ்புக் வாட்ச் (Facebook watch) என அழைக்கப்படும் தொகுதி புதிய பெயர் அதாவது பேஸ்புக் வீடியோ (Facebook Video) என மாற்றப்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான shortcut ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.