சீனாவில் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்
சீனாவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சீனாவின் தென் பகுதியில் சூறாவளியால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. Talim என்றழைக்கப்படும் சூறாவளியினால் நூற்றுக்கணக்கான ரயில், விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன.
இந்த ஆண்டு சீனாவை உலுக்கியுள்ள 4ஆவது கடும் புயல் இது என அந்நாட்டு வானிலை ஆய்வகம் கூறியிருக்கிறது.
குவாங்டோங் (Guangdong) மாநிலத்தில் புயல், மழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் 230,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 8,000 மீன் பண்ணை ஊழியர்களும் அடங்குவர். கரையோரப் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
(Visited 12 times, 1 visits today)