Google அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்
கூகுளின் புதிய காப்புரிமைக் கொள்கையில், Connected Flight Mode என்ற அம்சம் எல்லா ஆண்ட்ராய்டு சாதனங்களிலும் விரைவில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தால் ஒரு நபர் விமானத்தில் பயணிக்கும்போது தானாகவே ஆண்ட்ராய்டு சாதனம் ஃபிளைட் மோடில் இருக்கும்படி மாற்றிவிடும்.
கூகுளின் சமீபத்திய அறிக்கையின்படி எல்லா ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் விரைவில் Connected Flight Mode என்ற புதிய அம்சம் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் புதிய காப்புரிமைக் கொள்கையின் படி கனெக்டட் ஃபிளைட் மோட் அம்சம், ஒருவர் விமானத்தில் பயணிக்கும் போது தானாகவே அதைக் கண்டுபிடித்து அவர்களின் சாதனத்தை Airplane Mode-ல் போட்டுவிடும்.
Airplane Mode-ல் ஆண்ட்ராய்டு சாதனத்தை வைக்கும்போது, அதில் எதையுமே நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனால் தற்போது கனெக்டட் ஃபிளைட் மோடில், வைஃபை மற்றும் ப்ளூடூத்தை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் விமானம் மேல் எழும்பும்போதும், தரையிறங்கும் போதும் ஏற்படும் சிக்னல் குறுக்கீடுகளைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதாகும். மேலும் விமான நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் வைபை மட்டுமே ஒருவரால் விமானத்தில் பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு சாதனம் கனெக்டட் ஃபிளைட் மோடில் போடப்பட்டதும், அதன் பேக்ரவுண்டில் எவ்வித இயக்கங்களும் இருக்காது. உங்கள் சாதனத்தில் பேட்டரி குறைவாக இருந்தாலும் அதற்கான அறிவிப்பை உடனடியாகக் கொடுத்துவிடும். பயண வரலாறு மற்றும் விமான நிலைய வைஃபை போன்ற பல காரணிகளை கருத்தில் கொண்டு இந்த அம்சம் செயல்படுவதாகவும், அழுத்தம் மற்றும் சத்தங்களினால் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து நீங்கள் விமானத்தில் இருக்கிறீர்களா என்பதை தீர்மானிப்பதற்கு இது பயன்படும் என கூகுள் கூறியுள்ளது.
இந்த அம்சத்தால், ஒவ்வொரு விமானத்தை பொறுத்து செல்லுலார் நெட்வொர்க்குகளைத் தவிர, பல ரேடியோ இயக்கங்களைப் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் எப்போது முறையாக வெளிவரும் என கூகுள் தரப்பிலிருந்து கூறப்படவில்லை. இருப்பினும் இது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.