இலங்கை

சாணக்கியனை தாக்க முயற்சி: மட்டக்களப்பில் பெரும் பதற்றம்

மட்டக்களப்பில் அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (17) ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கல், ஊழலில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த தனியார் போக்குவரத்து பொறுப்பதிகாரி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவரை தாக்க முற்பட்ட இருவரை ஆர்ப்பாட்காரர்கள் துரத்தி துரரத்தி அடித்து வெளியேற்றியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை.

மட்டக்களப்பு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அனுமதிப்பதிரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்வண்டிகளை தடைசெய்ய கோரி மட்டு தனியார் பஸ்வண்டி நிலையத்தில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்ததையடுத்து அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, “பொலன்னறுவையில் உள்ள தனியார் பஸ்வண்டி உரிமையாளர் ஒருவரின் இரு பஸ்வண்டிகளுக்கு ஒரு போக்குவரத்து அனுமதி பத்திரத்திரம் வழங்கப்பட்டுள்து” என்றார்.

இதில் கிழக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையில் மட்டக்களப்பில் பொறுப்பாளரராக கடமையற்றி வந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் கடந்த 8 வருடங்களாக குறித்த பஸ்வண்டி சேவையில் ஈடுபட அனுமதி வழங்கி ஊழலில் புரிந்துள்ளதாகவும் அந்த பஸ்வண்டியின உரிமையாளரின் பஸ்வண்டியே மட்டக்களப்பு வாழைச்சேனை வரையிலான அனுமதி பத்திரத்துடன் பொலன்னறுவை கதுறுவெலவில் இருந்து காத்தான்குடி வரையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்டுள்ள போது மன்னம்பிட்டி விபத்தில் 11 பேர் உயிரிந்துள்ளனர் என்றார்.

இவ்வாறு சட்டவிரோதமாக அனுமதிபத்திரமின்றி போக்குவரத்து சேவையில் ஈடுபட அனுமதி வழங்கிய கிழக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபை பணிப்பாளர் உட்பட அதிகாரிகள், இந்த மன்னம்பிட்டியில் 11 பேரையும் படுகொலை செய்துள்ளனர் என்றார்.இந்த நிலையில் அங்கு இருந்த இருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நோக்கி, உண்மைக்கு புறம்பாக பேசவேண்டாம் என பேசியவாறு தாக்க முற்பட்டனர். எனினும், அங்கிருந்த பஸ்வண்டி உரிமையாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஒன்றிணைந்து அந்த இருவரையும் அங்கிருந்து துரத்தி துரத்தி அவர்கள் மீது தாக்குதல் நடாத்தினர்.

இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதையடுத்து குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அதனையடுத்து ஆர்ப்பாட்ட காரார்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான அராஜகங்களுக் நாங்கள் இடமளிக்க கூடாது தனிநபர்களுக்காக வக்காளத்து வாங்கி இந்த குழப்பத்தை ஏற்படுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம் அதேவேளை கொல்லப்பட்ட 11 பேரின் நீதி கிடைக்க வேண்டும் இந்த சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கியமை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதுடன் நாளை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை விசேடமாக பேசவுள்ளதாக சாணக்கின் தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்