நீர்கொழும்பில் வைத்தியரை தாக்கிய விமானிக்கு பிணை!
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மனநலப் பிரிவு வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கைது செய்யப்பட்ட நபர் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மிக் போர் விமானத்தின் விமானி ஒருவரே இவ்வாறு பிணையில் வெளியில் செல்ல அனுதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் தவறான தகவல்களை வழங்கி தனது மனைவியுடன் தகாத உறவை ஏற்படுத்த முயற்சித்ததாகவும், அதன்காரணமாகவே வைத்தியரை தாக்கியதாகவும், பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நபர் கூறியிருந்தார்.
சந்தேக நபரின் மனைவிக்கு வைத்தியர் அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு இரவு உணவிற்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)





