ஊழியர்கள் வேண்டும் – சீன நிறுனத்தின் விளம்பரத்தால் பாரிய சர்ச்சை
சீனாவின் ஷென்ஜென் நகரைச் சேர்ந்த மின்னியல் நிறுவனம் ஒன்று ஊழியர்கள் வேண்டும் என செய்த விளம்பத்தால் பாரிய சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
மது அருந்தாத, புகை பிடிக்காத, இறைச்சி உண்ணாத ஊழியர்கள் வேண்டும் என விளம்பர் செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த நிறுவனத்தின் பெயர் வெளியிடப்படவில்லை.
நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்த ஒருவர் இணையம்வழி நடத்தப்பட்ட நேர்காணலின்போது கிடைத்த அனுபவத்தைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார்.
நிறுவனம் முன்வைத்த விநோதமான தகுதித் தேவைகள் குறித்து அவர் நேர்காணலின்போது கேள்வி எழுப்பினார்.
ஆரோக்கியமான கலாசாரத்தை உருவாக்க, நிறுவனத்தின் உணவகத்தில் இறைச்சி உணவுவகைகள் விற்கப்படவில்லை என்றார் அந்த ஊழியர். இருப்பினும் கலாசாரத்தைப் பின்பற்றவேண்டும் என நிறுவனம் யாரையும் வற்புறுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நிறுவனத்தின் நிபந்தனைகள் அளவுக்கு மீறி இருப்பதாக இணையவாசிகள் குறைகூறினர்.
“நிறுவனம் ஊழியர்களை வேலைக்கு எடுக்கிறதா? சமயத் துறவிகளை வேலைக்கு எடுக்கிறதா? வேடிக்கையாக இருக்கிறது” என்று இணையவாசிகளில் ஒருவர் கூறினார்.
“நிறுவனத்தின் உணவகத்துக்கு இறைச்சியில் பணத்தைச் செலவிட விருப்பம் இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட நிபந்தனைகளை விதித்துள்ளது நிறுவனம்” என்றார் மற்றொருவர்.