ஜெர்மனியில் வரியால் சர்ச்சை – உணவகங்களில் உணவு அருந்துபவர்கள் நெருக்கடியில்
ஜெர்மனியில் உணவகங்களில் உணவு அருந்துபவர்களிடம் இருந்து பெறப்படும் வரி தொடர்பாக தற்பொழுது சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் கொவிட் காலங்களில் உணவு உட்கொள்கின்றவர்களுக்கு உணவு பொருட்களுக்கான மேலதிக வரியானது 19 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறு 7 சதவீதமாக குறைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் உணவகங்கள் மூடப்படுவதை தவிர்ப்பதற்காக அவர்களது வருமானத்தை ஓரளவு சரிசெய்வதற்காக அரசாங்கத்தால் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது
இந்த நடைமுறையானது டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் வேளையில் மீண்டும் பழைய நிலைமைக்கு அதாவது உணவகங்களில் உணவு உட்கொள்கின்றவர்கள் மேலதிக வரியாக 19 சதவீதத்தை அறவிட வேண்டும் என்ற கொள்கைக்கு தற்போதைய அரசாங்கமானது அறிவிக்க கூடிய சூழ்நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த புதிய திட்டத்துக்கு ஜெர்மனியின் பிரதான எதிர்கட்சியானது சிடி யு சி கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றது. உணவகங்களுடைய கூட்டு அமைப்பான டெகோசா என்று சொல்லப்படுகின்ற அமைப்பு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றது.
அதாவது இவ்வாறு இந்த உணவு பொருட்களுக்கான மேலதிக வரி 19 சதவீதமாக உயர்த்தப்பட்டால் பல உணவகங்கள் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவகங்களில் உணவு உட்கொள்ளும் பொழுது உணவுகளின் பொருட்கள் பன்மடங்காக அதிகரிக்க கூடிய அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.