இரட்டிப்பாகும் பிரித்தானியாவுக்கான வீசா தொடர்பான கட்டணம்-கலக்கத்தில் பலர்.

(Visited 24 times, 1 visits today)
பிரித்தானியாவுக்கு பயணிக்க எண்ணியுள்ளீர்களா நீங்கள்? இதை அறிந்திருத்தல் அவசியம்.
தற்காலிகமாக பிரித்தானியாவுக்கு குடிபெயர உள்ளவர்கள் தேசிய சுகாதார சேவை மற்றும் அரச ஊழியர்களின் ஊதியத்துக்கு உதவும் வகையில் மேலதிகமாக £400 பிரித்தானிய பவுண்டுகள் வரை செலுத்தவேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
பிரித்தானியவில் தொடர்ந்து பல்வேறு அரச ஊழியர்கள் மற்றும் தொழில் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இவர்களுக்கு 5 இல் இருந்து 7 விகிதம் வரை ஊதியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான செலவுகளுக்கு அரசுகள் பொதுவாக கடன் வாங்குதல் மற்றும் வரியை உயர்த்துதல் போன்றவற்றின் மூலம் அதற்கான நிதியை பெறுகின்றார்கள்.
[the_ad id=”37604″]
இதற்கு பதிலாக நாட்டுக்குல் வரும் வெளிநாட்டவரிடம் மேலதிக கட்டணம் அறவிடுதல் மற்றும் அரசு திணைக்களங்களின் செலவுகளை குறைதல் போன்றவற்றின் மூலம் ஊதிய உயர்வை சமாளிக்க பிரித்தானிய பிரதமர் எண்ணி உள்ளார். இதன் மூலம் காவல் துறை, ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மற்றைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பார் என்று தெரிகிறது.
இவ்வாறு வெளிநாட்டவருக்கு வீசா மற்றும் தொடர்புடை IHS கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம், மேலதிகமாக தேவைப்படும் 2 பில்லியனில் ஒரு பில்லியன் பவுண்டுகளை பெற முடியும் என்று தெரியவருகிறது.
பிரித்தானியாவுக்கு தற்காலிக வதிவிருமை பெற்று வருபவர்கள் தற்பொழுது ஒரு வருடத்துக்கு £624 (immigration health surcharge) பிரித்தானிய பவுண்டுகள் செலுத்துகின்றார்கள். இது ஒரு வருடத்துக்கு £1035 ஆக உயரவுள்ளது. மாணவர்கள் தற்பொழுது £470 பவுண்டுகளை ஒரு வருடத்துக்கு செலுத்துகிறார்கள் இது வருடத்துக்கு £776 ஆக உயர உள்ளது .
இதேவேளை பிரித்தானிய வீசாவுக்கான கட்டணமும் அதிகரிக்க உள்ளது (application fee).
இவ்வாறு கட்டணங்கள் சுமார் இரண்டு மடங்கு அதிகரிப்பதால் பிரித்தானியாய்வில் வீசா புதுப்பிக்க உள்ளவர்களும் அங்கெ செல்ல திட்டமிடும் பயணிகளுக்கும் எவ்வாறு இந்த உயர்வை சமாளிப்பது என்று கலக்கம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு சுற்றுலா வீசா 15 விகிதமும் குடியிருமை மற்றும் நிரந்தர வதிவுருமாய் போன்ற விண்ணப்பங்களுக்கு குறைந்தது 20 விகிதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக ஒரு நிரந்தர வதிவிருமை விண்ணப்பிக்க £2,885 வரை செலவாகும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருப்பின் £11,500 மேல் தேவைப்படும். அந்த குடும்பம் அதற்க்கு முன்னர் உள்ள 5 வருடத்தில் மொத்தமாக £15,000 இம்மிகிரேஷன் ஹெல்த் சர்ச்ர்க் (IHS) செலுத்து வேண்டி இருந்திருக்கும்
WATCH LIVE: Our fair and responsible decision on Public Sector Pay. https://t.co/YAIZZqNl2i
— Rishi Sunak (@RishiSunak) July 13, 2023
Notifications