நினைத்ததை அடைய ”law of attraction” ஐ இப்படி பயன்படுத்துங்கள் : நிச்சயம் நடக்கும்!
நாம் நினைக்கும் காரியங்கள், அல்லது எங்களுடைய எண்ணங்கள் ஈடேறுவதற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் இடையில் ஓர் ஈர்ப்பு சக்தி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
பொதுவாக எங்களுடைய எண்ணங்கள் எல்லாம் சிறந்ததாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதற்கு காரணம் எங்களுடைய எண்ணங்கள் தான் பிற்காலத்தில் செயல்களாக உருமாறுகிறது. நாம் நினைக்கும் சிறிய விடயங்கள் கூட ஈர்ப்பு சக்தியின் வலிமையால் நடைபெறுகிறது.
உதாராணமாக நீங்கள் யாரையாவது காணவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆனால் அவரை பார்ப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யவில்லை. இருந்தாலும் நீங்கள் நினைத்து சில நாட்களிலேயே அந்த நபரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதற்கு காரணம் இந்த பிரபஞ்சம் தான்.
எங்களுடைய எண்ணங்களை உள்வாங்கி இந்த பிரபஞ்சம் அதை மீண்டும் எம்மிடமே கொண்டுவந்து தரும். இதைதான் ஈர்ப்பு விசை என்றும் சொல்கிறோம். அங்கனமாக சில விடயங்களை செய்வதற்கு நேரகாலமும் முக்கியமானது.
சாதாரண நேரங்களில் நீங்கள் ஒரு விடயத்தை செய்வதற்கும், அந்த விடயத்தை பிரம்ம முகூர்த்த நேர்த்தில் செய்வதற்கும் சில வேறுபாடுகள் இருக்கிறது. குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேர்த்தில் நீங்கள் செய்யும் விடயங்கள் நூற்றுக்கு 99 சதவீதம் வெற்றிபெறும்.
அப்படி இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் என்ன இருக்கிறது. இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இன்றைக்கு மிகப் பெரிய அளவில் சாதித்துள்ள சாதனையாளர்கள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த நேர விதியை கடைப்பிடிக்கிறார்கள். அப்படி பட்ட இந்த பிரம்ம முகூர்த்தத்திற்கு இந்து புராணங்களின் படி சில விளக்கங்களையும் கொடுக்கிறார்கள்.
அதாவது இரவின் கடைசி நேரத்துக்கும் சூரிய உதயத்துக்கும் இடையில இருக்ககூடிய நேரம்தான் இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என சொல்கிறார்கள்.
இந்த பிரம்ம முகூர்த்தம் ஒரு நாளைக்கு 30 முறை இருக்கும் அதுல 15 முகூர்த்தங்கள் பகலிலும், 15 முகூர்த்தங்கள் இரவிலும் இருக்குமாம். 24 மணித்தியாலத்தில் 48 நிமிடங்கள் இந்த பிரம்ம முகூர்த்த நேரம் இருக்குமாம்.
இதன்படி அதிகாலையில், 3 மணியில் இருந்து 5.30 மணி வரைக்கும் இருக்ககூடிய நேரம்தான் பிரமமுகூர்த்த நேரம் என சொல்லப்படுகிறது. நீங்கள் தூங்கி எழுவதற்கு சிறந்த நேரமாகவும் இந்த நேரத்தைதான் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் எழும்புகிறவர்கள் பெரும்பாலும், அறிவாளிகளாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம்.
அத்துடன் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், நீங்கள் இந்த பிரபஞ்சத்திடம் கேட்கும் விடயங்கள் காரியசித்தி அடையும். அதாவது நீங்கள் எந்த விடயத்தை ஆசைப்படுகிறீர்களோ அதை பிரமமுகூர்த்தத்தில் தொடர்ச்சியாக 21 நாளைக்கு வாய்விட்டு சொல்லுவதன் மூலமாகவோ, அல்லது வெற்று தாளில் எழுதுவதன் மூலமாகவோ பிரபஞ்சத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இதனை law of attraction என்று சொல்கிறார்கள்.
law of attraction விதியின்படி நாம் என்ன நினைக்கின்றோமோ அதைதான் பிரபஞ்சம் நடத்தி வைக்கும். உதாரணத்திற்கு வீடு, வசதி, பணம், பொருள் என எந்த விடயத்தை கேட்டாலும் இந்த பிரபஞ்சம் அதை நிறைவேற்றி வைக்கும். அதற்கு சிறந்த நேரம் இந்த பிரம முகூர்த்த நேரம் தான். இதற்கு சில விதிகளும் உண்டு. என்ன என்ன விதிகள் இருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.