இந்தியாவில் வரவுள்ள தடை? உலகளாவிய செலவுகள் இன்னும் அதிகமாக உயரும் அபாயம்
ஏராளமான அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்ய இந்தியா யோசித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி பல அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
பாஸ்மதி அல்லாத அனைத்து வகை அரிசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
அரிசி ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடான இந்தியா ஆகும்.
அரிசி ஏற்றுமதியை தடை செய்வதற்கான இந்தியாவின் முடிவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்,
இது இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் தோராயமாக 80% பாதிக்கும்.
இந்த நடவடிக்கையானது உள்நாட்டு விலைகளைக் குறைக்கும் அதே வேளையில், உலகளாவிய செலவுகள் இன்னும் அதிகமாக உயரும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)