பாகிஸ்தானில் கனமழையில் சிக்கி 86 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளதுடன், 151 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் மழையால் 97 வீடுகள் சேதமடைந்துள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைபர் பக்துன்க்வாவில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
(Visited 10 times, 1 visits today)





