காட்டு பன்றிகளுக்கான பாதுகாப்பை தள்ளுபடி செய்த சீனா
காட்டு பன்றிகளுக்கான பாதுகாப்பை சீனா தள்ளுபடி செய்தது.
பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேட்டையாட அனுமதிக்கப்படும் எனவும் சீன அரசு அறிவித்துள்ளது.
காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து விவசாயிகளை பாதிக்கத் தொடங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் 31 மாகாணங்களில் 28 மாகாணங்களில் காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. பல இடங்களில் காட்டுப்பன்றிகள் பலரை தாக்கியுள்ளன.
ஆனால் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றிகள் விலக்கப்பட்டதால், இது கட்டுப்பாடற்ற வேட்டையாடலுக்கும் காட்டுப்பன்றிகளின் அழிவுக்கும் வழிவகுக்கும் என்று உலகளாவிய விலங்கு ஆர்வலர்கள் அமைப்புகள் எதிர்வினையாற்றுகின்றன.
காட்டுப் பன்றிகளை விட விவசாயிகளின் உயிரும் பயிர்களும் முக்கியம் என்பது சீனாவின் நிலைப்பாடு.
சமீபகாலமாக, முக்கிய சாலைகளில் புகுந்த காட்டுப்பன்றிகள், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி, சோள வயல்களில் பயிர்களை நாசம் செய்யும் காட்சிகள் வெளியாகியிருந்தன.
இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றி நீக்கப்பட்டது. புதிய பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் 1924 இனங்கள் உள்ளன.