கோட்டாபய ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்ற வெளிநாட்டில் இருந்து வந்த பணம்
கடந்த வருடம் நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு பணம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தெரிவித்துள்ளார்.
பிரதிவாதிகளில் ஒருவர் குவாத்தமாலாவில் இருந்து பணம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குவாத்தமாலா போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர் பெற்ற நாடு எனவும், போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு தலைமை தாங்கிய சந்தேக நபரின் கணக்கிற்கும் வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிளர்ச்சியால் அராஜகமாக இருந்த உலகில் எந்த ஒரு நாடும் ஓராண்டு குறுகிய காலத்தில் இப்படி ஒரு மாற்றம் அடைந்ததில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சரியான வேலைத்திட்டத்தினால் நாடு மீண்டு வருவதாகமஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.