பிரான்ஸில் 80 தபாலகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

பிரான்ஸில் கடந்த ஒருவாரமாக இடம்பெற்ற வன்முறையில் இதுவரை 150 தபாலகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் இருப்பதாக அறிய முடிகிறது.
தபாலங்களுடன் இணைந்துள்ள தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பல தபாலங்கள் எரிக்கப்பட்டும், அடித்து நொருக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பான்மையாவை இல் து பிரான்ஸிற்குள் உள்ள நிலையங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த தபாலகங்களில் 80 நிலையங்கள் திறக்கமுடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 15 மில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)