இத்தாலியில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்
இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரம் மிலன். இங்கு முதியோர் இல்லம் இயங்கி வருகிறது. சுமார் 200 முதியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்கு முதியவர்கள் அனைவரும் அவரவர் அறைகளில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த இல்லத்தின் ஒரு அறையில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக மற்ற அறைகளுக்கும் பரவியது.
மீட்பதில் சிரமம்
இதையறிந்த முதியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் சக்கர நாற்காலியில் விரைந்தனர். ஆனால் புகை மண்டலம் காரணமாக பலர் மூச்சு திணறினர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு தண்ணீரை இறைத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனிடையே முதியோர் இல்லத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் மீட்புப் பணி கடினமாகிவிட்டது.
இதை பொருட்படுத்தாமல் மீட்புக்குழுவினர் களத்தில் இறங்கினர். எனினும் இந்த தீ விபத்தில் 6 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.