வெள்ளைமாளிகையில் கொக்கைன் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் : கையில் எடுத்த ஜனாதிபதி போட்டியாளர்கள்!
வெள்ளை மாளிகையில், கொக்கைன் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
அதாவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதேபோல், ஜனாதிபதி வேட்பாளர் ரான் டிசாண்டிஸ் ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே தற்போது ஜோ படைனின் அரசாங்கத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
போதைப்பொருள் மீட்கப்பட்டபோது அதிபர் பைடன் அங்கு இருக்கவில்லை என்பதும், அது எவ்வாறு வெள்ளை மாளிக்கைக்கு கொண்டுவரப்பட்டது என்பதையும் ஜனாதிபதி வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.
இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், “ஓவல் அலுவலகத்திற்கு மிக அருகில் கண்டுப்பிடிக்கப்பட் கொக்கைன் போதைப்பொருள் அதிபர் பயன்பாட்டிற்கு அன்றி வேறு யாருக்காகவாவது கொண்டுவரப்பட்டது எனக் கூறினால் யாரேனும் நம்புவார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் இந்த செய்தி விரைவில் போலி செய்தி எனக் குறிப்பிடப்பட்டு அழிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இது கொக்கைன் அல்ல. ஆஸ்பிரின் என்றும் இதை பயன்படுத்துவது பொதுவானது என்றும் கூறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் 2024 ஜனாதிபதி வேட்பாளரும் புளோரிடாவின் தற்போதைய ஆளுநருமான டிசாண்டிஸும் அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கோகோயின் இருப்பது குறித்து பிடன் நிர்வாகத்தை விமர்சித்தார்.