தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்துக்கு அஜித் பவார் கடிதம்
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாக பிரிந்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.
ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அஜித் பவார் மற்றும் அவரை ஆதரிக்கும் 8 எம்.எல்.ஏ-க்கள் கடந்த 2ம் திகதி அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இன்று சரத்பவார் மற்றும் அஜித் பவார் அணியினர் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை மும்பையில் குவித்துள்ளனர்.
இதில், அஜித் பவாருக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்களும், சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 17 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி அஜித் பவார் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், மும்பையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.