சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
அடுத்த பெரும் போகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, அவர்களின் நிலத்தை தயார் செய்ய ஏக்கருக்கு 20,000 ரூபாய்.வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, திருப்பிச் செலுத்த வேண்டிய தேவையில்லாத தொகையாக இந்த நிதி வழங்கப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சோளச் செய்கைக்குத் தேவையான அனைத்து விதைகள் மற்றும் உரங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கால்நடை தீவனத்தை தயாரிப்பதற்கு தேவையான சோளம் பற்றாக்குறையால் பால், முட்டை மற்றும் கோழிக்கறி உற்பத்தி இந்த வருடத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, சோள உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.